செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர்!

10:18 AM Jan 12, 2025 IST | Murugesan M

தேசிய அளவில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் தமிழக வீரர் யோகேஸ்வரன் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

Advertisement

ஹரியானா மாநிலத்தில் கடந்த 5-ம் தேதி தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டி நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அணி சார்பில், விருதுநகர் மாவட்டம் ஆத்திபட்டியைச் சேர்ந்த யோகேஸ்வரன் பங்கேற்றார்.

அவர், 90 கிலோ சப் - ஜூனியர் பிரிவில் 195 கிலோ எடையை தூக்கி வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதே தனது லட்சியம் என்று கூறியுள்ள அவர், இதற்கு தமிழக அரசு உதவ முன்வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
MAINsportstamilnaduweightlifting competition
Advertisement
Next Article