தேசிய இயற்கை வேளாண்மை திட்டத்துக்கு ஒப்புதல்!
2 ஆயிரத்து 481 கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய இயற்கை வேளாண்மை திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Advertisement
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் விவரித்தார்.
அப்போது விவசாயிகளின் நலனை மேம்படுத்த மத்திய அரசு கடமைப்பட்டிருப்பதாக கூறிய அவர்,
இதற்காக 2 ஆயிரத்து 481 கோடி ரூபாய் மதிப்பில் தேசிய இயற்கை வேளாண் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக தெரிவித்தார். இதில் ஆயிரத்து 584 கோடி ரூபாயை மத்திய அரசும், எஞ்சிய 897 கோடி ரூபாயை மாநில அரசும் விகிதாசார அடிப்படையில் விநியோகிக்கும் எனக் கூறினார்.
நாடு முழுதும் 78 கோடி வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டைகள் பயன்பாட்டில் உள்ளதாகவும், தற்போதுள்ள தொழில்நுட்பத்தை நவீனப்படுத்தும் வகையில் பான் 2 பாய்ண்ட் ஓ திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வளர்ந்த இந்தியாவை உருவாக்கும் நோக்கோடு அடல் புதுமை திட்டத்தை 2 ஆயிரத்து 750 கோடி ரூபாய் செலவில் 2028ஆம் ஆண்டு வரை நீட்டிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் அவர் தெரிவித்தார். ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக வேலை வாய்ப்பு அட்டவணை அறிமுகமாகிறது என்று தெரிவித்த அஷ்வினி வைஷ்ணவ்,கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறையில் 5 லட்சம் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், கூறினார். மேலும் 12 ஆயிரம் இணைப்பு பெட்டிகள் தயாராக இருப்பதாகவும் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.