செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் - அண்ணாமலை அழைப்பு!

07:28 AM Mar 26, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

திமுக-வை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் கட்சிகள் பாஜக கூட்டணிக்கு வரலாம் என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

பாஜக சார்பில் சென்னை எழும்பூரில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அமித்ஷாவை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்றார்.

திமுக செய்துள்ள தவறுகளை, துரோகங்களை பட்டியலிட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறோம் என்றும், அடுத்த எட்டு மாத காலத்தில் கூட்டணி நிலவரம் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Advertisement

தேசிய ஜனநாயக கூட்டணியை நோக்கி அனைவரும் வருவதாக தெரிவித்த அவர், 2026 தேர்தலில் இது எதிரொலிக்கும் என்றும் கூறினார்.

இஸ்லாமியர்கள் நலனுக்காக பிரதமர் மோடி பல திட்டங்களை முன்னெடுத்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர், பாரதப் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில், 31% சிறுபான்மையின மக்கள் வீடு கிடைதுள்ளதாகவும்,  முத்ரா கடனுதவித் திட்டத்தில் 36% சிறுபான்மையின மக்கள் பயனடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

விவசாயிகள் கௌரவ நிதி பெற்றவர்களில் 33% சிறுபான்மையினர். உஜ்வாலா திட்டத்தில் பயனடைந்தவர்களில் 37% சிறுபான்மையினர் என்றும்,  சிறுபான்மையின பெண்குழந்தைகள் பள்ளிக் கல்வி முடித்ததும், ரூ. 51,000 நிதி உதவி, நமது பாரதப் பிரதமர் ஆட்சியில் வழங்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.  ஆனால், திமுக சிறுபான்மையின மக்களுக்காகக் கொண்டு வந்த திட்டங்கள் என்ன? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Advertisement
Tags :
annamalai pressmeetannmalaiaFEATUREDIftar fastingIftar fasting programMAIN
Advertisement