செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து இரு முறை வெளியேறி தவறு செய்துவிட்டேன் - நிதிஷ் குமார் ஒப்புதல்!

08:37 AM Mar 31, 2025 IST | Ramamoorthy S

தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து இரண்டு முறை வெளியேறி தவறு செய்துவிட்டதாக ஐக்கிய ஜனதா தள தலைவரும் பீகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Advertisement

பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நிதிஷ் குமார் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய நிதிஷ் குமார், தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து இரண்டு முறை வெளியேறி தவறு செய்துவிட்டதாகவும், மீண்டும் அந்தத் தவறு நடக்காது என்றும் உறுதிப்பட தெரிவித்தார்.

Advertisement

மேலும் பாஜக உடனான கூட்டணி வரலாற்றை விவரித்த அவர், 2014-இல் பிரிந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்ததையும், 2022-ம் ஆண்டில் கூட்டணி முறிந்ததையும் மேற்கோள்காட்டினார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கு முன்னதாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைந்ததாக கூறிய நிதிஷ் குமார்,  பாஜகவுடனான கூட்டணி முறிவுக்கு தனது சொந்தக் கட்சியில் உள்ள சிலர் தான் காரணம் என்றும் குறிப்பிட்டார்.

Advertisement
Tags :
Bihar Chief Minister Nitish KumarFEATUREDhome minister amit shahJanata DalJanata Dal Unitedleaving the National Democratic Alliance twice.MAINnda
Advertisement
Next Article