செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதி இல்லை - அமித் ஷா திட்டவட்டம்!

06:35 AM Mar 28, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Advertisement

குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025 தொடர்பாக மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாட்டின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் குடியேற்ற மசோதா-2025 பூர்த்தி செய்யும் என தெரிவித்தார்.

இந்தியாவில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக உணர்வதாக தெரிவித்த அமித்ஷா, இந்தியாவில் நுழையும் அனைத்து வெளிநாட்டினரையும் கண்காணிக்கும் அமைப்பு ஏற்படுத்தப்படும் என தெரிவித்தார்.

Advertisement

நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் எந்தவித நடவடிக்கைகளையும் சகித்துக் கொள்ள முடியாது என திட்டவட்டமாக கூறிய அவர், தேசத்தின் பாதுகாப்பில் குடியேற்றமும் முக்கிய அங்கமாக கருதப்படுவதாகத் தெரிவித்தார்.

நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்க யாராவது வந்தால், அவர்கள் எப்போதும் வரவேற்கப்படுவார்கள் எனக்கூறிய அவர், இந்தியா இலவச தங்குமிடம் அல்ல எனவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

Advertisement
Tags :
FEATUREDhome minister amit shahImmigration and Foreigners Bill 2025Lok SabhaMAINthreat to national security
Advertisement