தேசிய பெண் குழந்தைகள் தினம் - மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!
12:10 PM Jan 24, 2025 IST
|
Sivasubramanian P
இதேபோல் இன்று பிற்நத நாள் கொண்டாடும் மத்திய அமைச்சர் லாலன் சிங்கிற்கு எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Advertisement
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், சமுதாயத்தில் பெண்களுக்கான சம உரிமையை மேம்படுத்துவதை வலியுறுத்துகின்ற நோக்கத்துடன் இன்றைய தினத்தை ‘தேசிய பெண் குழந்தைகள்’ தினமாக நாம் கொண்டாடுகிறோம் என தெரிவித்துளள்ளார்.
தங்களுக்கு கிடைக்கப்பெற்ற முக்கியத்துவத்தின் அடிப்படையில், தேசத்தின் நிலையான வளர்ச்சியிலும், கல்வி மற்றும் இன்னபிற துறைகளிலும் பெரிதளவில் பங்காற்றி வரும், நாட்டில் உள்ள அனைத்து பெண் குழந்தைகளுக்கும், மகளிருக்கும் ‘தேசிய பெண் குழந்தைகள்’ தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
Next Article