செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைராக ஓய்வுபெற்ற நீதிபதி ராம சுப்பிரமணியன் நியமனம்!

10:03 AM Dec 24, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதி ராம சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருந்த உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஏ.எம்.மிஸ்ரா, கடந்த ஜூன் 1-ஆம் தேதி ஓய்வு பெற்றார்.

இதையடுத்து புதிய தலைவரை நியமிப்பது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக் குழுவினர், நாடாளுமனற வளாகத்தில் ஆலோசனை நடத்தினர்.

Advertisement

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக ராம சுப்பிரமணியனை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நியமித்தார்.

கமிஷனின் உறுப்பினர்களாக பிரியங்க் கனூங்க், முன்னாள் நீதிபதி பித்யூத் ரஞ்சன் சாரங்கி ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டனர். மனித உரிமைகள் ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராம சுப்பிரமணியன், தமிழகத்தின் மன்னார்குடியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Tags :
FEATUREDFormer Supreme Court judge A.M. MishraMAINNational Human Rights Commission.National Human Rights Commission. chairmanRetired judge Rama Subramanian
Advertisement