செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தேசிய வாக்காளர் தினம் - விளாத்திகுளம் அருகே விழிப்புணர்வு பேரணி!

08:45 AM Jan 25, 2025 IST | Sivasubramanian P

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Advertisement

15 வது தேசிய வாக்காளர்  கொண்டாடப்படும் நிலையில், விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட நாகலாபுரம் பகுதி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக  நாகலாபுரம் அரசு கல்லூரி மற்றும் நாட்டு நல பணித்திட்ட மாணவ- மாணவியர்களின் மனித சங்கிலி அணிவகுப்பு மற்றும் மாபெரும் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பேரணியை விளாத்திகுளம் உதவி வாக்காளர் பதிவு அலுவலரும் வட்டாட்சியருமான ராமகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.கல்லூரி முதல்வர் இராமலிங்கம் தலைமையில் தேர்தல் துணை வட்டாட்சியர் பாலமுருகன் முன்னிலையில் இப்பேரணி அருப்புக்கோட்டை மெயின் ரோடு,சமத்துவபுரம் வழியாக கல்லூரிக்கு வந்தடைந்தது.

Advertisement

வழி நெடுங்கிலும் மாணவ மாணவியர்கள் இந்திய தேர்தல் ஆணைய விழிப்புணர்வு வாசகங்களை கோஷமிட்டும், பதாகைகளை கையில் ஏந்தியும் பொது மக்களுக்கு வழி நெடுகிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.

Advertisement
Tags :
awareness rallyMAINNagalapuram Government CollegeNational Voter's DayNational Voters Day awareness rallyVilathikulam.
Advertisement
Next Article