செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தேச வளர்ச்சிக்கு வாஜ்பாய் அளித்த பங்களிப்புகளை நன்றியுடன் போற்றுவோம் - மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம்!

09:30 AM Dec 25, 2024 IST | Murugesan M

தேச வளர்ச்சிக்கு வாஜ்பாய் அளித்த பங்களிப்புகளை நன்றியுடன் போற்றுவோம் என  மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "முன்னாள் பாரதப் பிரதமர் 'பாரத ரத்னா' அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் 100-வது ஆண்டு பிறந்த தினம் இன்று. இருபதாம் நூற்றாண்டின் இறுதி காலகட்டத்தில், பாரத தேசம் அடையத் துவங்கிய அசுர வளர்ச்சிக்கு தனது ஆட்சிக் காலத்தில் வித்திட்ட ஐயா வாஜ்பாய் அவர்கள், தொழில்நுட்பம் சார்ந்து தனக்கிருந்த தொலைநோக்குப் பார்வையின் மூலம் தேசத்தை கட்டமைக்கத் துவங்கினார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில், தங்க நாற்கரச் சாலை திட்டம் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளை சர்வதேச தரத்தில் கட்டமைத்ததன் விளைவாக, தொழில் போக்குவரத்திற்கு சாதகமான சூழல் கொண்ட தேசமாக இந்தியாவை உருவாக்கினார்.

Advertisement

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் தலைமையில், வாஜ்பாய் அவர்கள் 1998-ஆம் ஆண்டு மேற்கொண்ட 'பொக்ரான்' அணு ஆயுத சோதனையின் மூலம், ராணுவ வல்லரசுகளுக்கு சிறிதும் குறைவில்லாத நாடு நமது பாரதம் என்பதை உலகிற்கு உணர்த்தினார்.

எதிர்க்கட்சித் தலைவராக, வெளியுறவுத் துறை அமைச்சராக, பிரதமராக ஆற்றிய பணிகள் ஏராளம். தனது தேர்ந்த அரசியல் அனுபவத்தின் மூலம் நாட்டின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளை வடிவமைத்தார்.

தனது வாழ்நாளின் பெரும்பான்மை காலத்தை, அரசியல் மூலம் நாட்டு மக்களுக்கு சேவை புரிவதில் அர்ப்பணித்து வாழ்ந்த, ஐயா 'பாரத் ரத்னா' அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் இன்றைய 100-வது பிறந்த தினத்தில், தேசத்தின் வளர்ச்சிக்கு அவர் அளித்த பங்களிப்புகளை நன்றியுடன் போற்றுவோம்" என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
FEATUREDL MuruganMAINminister l muruganvajpayee 100th birth anniversary
Advertisement
Next Article