தேனி : தெருநாய்கள் கூட்டத்தால் மக்கள் அச்சம்!
02:36 PM Mar 16, 2025 IST
|
Murugesan M
தேனி மாவட்டம் கண்டமனூர் பகுதியில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Advertisement
ஆண்டிபட்டி - வருஷநாடு சாலையில் அதிகளவில் நாய்கள் சுற்றித் திரிவதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடன் சாலையை கடந்து செல்கின்றனர்.
மேலும், குழந்தைகள் அதிகம் வசிக்கும் பகுதி என்பதால் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், நாய்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
Advertisement