தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு - மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு!
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது தெரிய வந்துள்ளது.
மகராஷ்டிராவில் 288 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை செய்தி நிறுவனங்கள் வெளியிட்டன.
அதன்படி பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சி.என்.என். நியூஸ் 18 வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாஜக 154 தொகுதிகளையும், காங்கிரஸ் கூட்டணி 128 தொகுதிகளையும், மற்றவை 6 தொகுதிகளையும் கைப்பெற்றுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் republic வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாஜக 137 முதல் 157 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் கூட்டணி 126 முதல் 146 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் மற்றவை இரண்டு முதல் 8 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் abp வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாஜக 150 முதல் 170 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் கூட்டணி 110 முதல் 130 தொகுதிகளை கைப்பற்றும் எனவும், மற்றவை 8 முதல் 10 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.