தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு - ஜார்கண்டில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு!
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் ஜார்க்கண்டில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக பெரும்பாண்மையான செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
Advertisement
ஜார்கண்டில் 81 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெற்றது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை செய்தி நிறுவனங்கள் வெளியிட்டன. அதன்படி சி.என்.என். நியூஸ் 18 வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாஜக 47 தொகுதிகளையும், காங்கிரஸ் கூட்டணி 30 தொகுதிகளையும், மற்றவை 4 தொகுதிகளையும் கைப்பெற்றுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாஜக 40 முதல் 44 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் கூட்டணி 30 முதல் 40 தொகுதிகளை கைப்பற்றும் எனவும் மற்றவை 1 தொகுதியை மட்டும் கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் NDTV வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் பாஜக 42 முதல் 47 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் கூட்டணி 25 முதல் 30 தொகுதிகளை கைப்பற்றும் எனவும், மற்றவை 1 முதல் 4 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.