தேர்தல்களில் பங்கேற்பது வெறும் உரிமை மட்டுமல்ல பொறுப்பும் கூட... - மத்திய அமைச்சர் எல்.முருகன்
02:22 PM Jan 25, 2025 IST
|
Sivasubramanian P
தேர்தல்களில் பங்கேற்பது வெறும் உரிமை மட்டுமல்ல பொறுப்பு என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
Advertisement
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளதாவது : "தேசிய வாக்காளர் தினமான இன்று, நமது ஜனநாயகத்தின் வலிமையையும், ஒவ்வொரு வாக்களிப்பின் சக்தியையும் கொண்டாடுவோம்.
தேர்தல்களில் பங்கேற்பது வெறும் உரிமை மட்டுமல்ல, ஒரு பொறுப்பு. துடிப்பான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய ஜனநாயகத்திற்கு பங்களிப்பதாக உறுதிமொழி எடுப்போம்" என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement