தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படுகிறது! - ஆளுநர் ஆர்.என்.ரவி
04:58 PM Nov 26, 2024 IST | Murugesan M
இந்திய தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்படுவதாகவும், தேர்தலில் தோற்றவர்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தை குற்றம் சாட்டுவதாகவும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி, சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் சட்டக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
Advertisement
நிகழ்ச்சியில் பேசிய அவர்,
மொழியால் ஏற்படும் பிரிவினைவாதம் ஆபத்தானது என்றும், சமூக நீதி அனைவருக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமை என்றும் தெரிவித்தார்.
Advertisement
மேலும், இந்திய தேர்தல் ஆணையம் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் செயல்படுவதாக கூறிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தோற்றவர்கள் வாக்குப்பதிவு இயந்திரம் மீது பழிபோடுவதாக விமர்சித்தார்.
Advertisement