தேவஸ்தானத்தில் பணிபுரியும் 300 மாற்று மதத்தினர் மீது நடவடிக்கை!
05:06 PM Nov 19, 2024 IST | Murugesan M
திருமலை திருப்பதி கோயிலில் பணிபுரியும் மாற்று மதத்தினர் விருப்ப ஓய்வு அல்லது ஆந்திர அரசின் வேறு துறைக்கு பணியிட மாறுதலாகி செல்லுமாறு தேவஸ்தான வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
திருப்பதியில் நடைபெற்ற தேவஸ்தான வாரிய ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாநில அரசின் பரிசீலனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.
Advertisement
இதன்மூலம் தேவஸ்தானத்தில் பணிபுரியும் 7 ஆயிரம் ஊழியர்களில், சுமார் 300 பேர் பாதிக்கப்படுவர் என்று கூறப்படுகிறது. இதேபோல திருமலையின் தரிசன நேரத்தைக் குறைக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் தேவஸ்தானம் பரிசீலித்து வருகிறது.
Advertisement
Advertisement