தை அமாவாசை : சதுரகிரி மலை கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்!
04:00 PM Jan 29, 2025 IST
|
Murugesan M
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் தை அமாவாசையை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர்.
Advertisement
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிரதோஷம் மற்றும் தை அமாவாசையை முன்னிட்டு ஜனவரி 27ஆம் தேதி முதல் ஜனவரி 30ஆம் தேதி வரை மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் தை அமாவாசையை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று இரவு முதல் தாணிப்பாறை அடிவாரப் பகுதியில் குவிந்தனர். காலை 6 மணிக்கு வனத்துறையினர் கதவை திறந்தவுடன், பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர்.
Advertisement
Advertisement