செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தை அமாவாசை - முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகளில் குவிந்த மக்கள்!

08:25 AM Jan 29, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

தை அமாவாசையை முன்னிட்டு  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில்   தங்களது முன்னோர்களுக்காக பொதுமகக்ள் தர்ப்பணம் கொடுத்தனர்.

Advertisement

மதுரை  வைகை ஆற்றங்கரையில் சிம்மக்கல் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்

வைகையாற்றின் தென்கரை பகுதிகளான பேச்சியம்மன் படித்துறை, யானைக்கல் தரைப்பாலம், ஆழ்வார்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு படையலிட்டு தர்ப்பணம் அளித்து பின்னர் ஆற்றில் புனித நீராடி சென்றனர்.

Advertisement

மதுரை மட்டுமின்றி பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்களும் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து சென்றனர்.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் திரளான மக்கள் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து கடலில் புனித நீராடிய ஆயிரக்கணக்கானோர், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

திருச்சி காவிரி ஆற்றங்கரைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வருகை தந்தனர். தொடர்ந்து காவிரியில் புனித நீராடிய மக்கள், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு மேற்கொண்டனர்.

நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரைக்குஅதிகாலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்தனர். தொடர்ந்து எள், மாவு உள்ளிட்ட பொருட்களை கொண்டு அவர்கள், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

இதேபோல்  குற்றாலத்திற்கு திரளான மக்கள் வருகை தந்தனர். தொடர்ந்து அருவிகளில் புனித நீராடிய மக்கள், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு மேற்கொண்டனர்.

தை அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏராளமானோர் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து கோயில் கடற்கரையில் நீராடிய மக்கள், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

கன்னியாகுமரி கடற்கரையில் அதிகாலை முதலே திரண்ட ஏராளமான பக்தர்கள், கடலில் புனித நீராடினர். தொடர்ந்து பச்சரிசி, எள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

திருநெல்வேலி முறப்பநாடு தாமிரபரணி ஆற்றங்கரையில் திரளான மக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு குவிந்த நிலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Advertisement
Tags :
FEATUREDMaduraiMAINPechiyamman PadithuraiTamil NaduThai Amavasyavaigai riverwater bodies
Advertisement