செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தவறான தகவல் அளித்து வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - அண்ணாமலை

06:50 AM Feb 26, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிடுவது தவறான தகவல் எனவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தொகுதி மறுசீரமைப்பு குறித்து யாருமே பேசாத நிலையில் முதல்வர் ஏன் நாடகமாடுகிறார்  என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தவறான தகவல்களை வெளியிடுவதாகவும், தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொள்வது தங்கள்  பொறுப்பு என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

Advertisement

முதலமைச்சர் ஸ்டாலின் எதற்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும்,  தமிழகத்தில் எம்.பி தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என முதலமைச்சரிடம் கூறியது யார் என்றும் அவர் வினவினார்-

தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தென் மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் அண்ணாமலை உறுதிபட தெரிவித்தார்.

போராட்டம் நடத்தும் ஜாக்டோ ஜியோ மீது நம்பிக்கை இல்லை என்றும்,
திமுகவும், ஜாக்டோ ஜியோவும் இரட்டை பிறவிகள் என்றும்  அண்ணாமலை தெரிவித்தார். அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக பாஜக எப்போதும் நிற்கும் என்றும் அவர் கூறினார்.

Advertisement
Tags :
annamalai pressmeetBJP State President AnnamalaiChief Minister Stalinconstituency realignment issueFEATUREDMAINTamil Nadu
Advertisement