செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தொடர் மழை - வேகமாக நிரம்பும் அணைகள்!

03:48 PM Nov 13, 2024 IST | Murugesan M

தமிழகத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Advertisement

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 4 ஆயிரத்து 992 கனஅடியில் இருந்து 5 ஆயிரத்து 451 கனஅடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், அணையின் நீர்இருப்பு 72 புள்ளி 93 டிஎம்சியாக உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 95 கனஅடியில் இருந்து 404 கனஅடியாக அதிகரித்துள்ளது. புழல் ஏரியின் நீர்மட்டம் 16 புள்ளி 93 அடியாக உள்ள நிலையில், ஏரியில் இருந்து 219 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Advertisement

சோழவரம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து 35 கனஅடியில் இருந்து 69 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஏரியில் நீர் இருப்பு 108 மில்லியன் கனஅடியாக உள்ளது.

தொடர் கனமழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 310 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 22 புள்ளி 05 அடியாக உள்ள நிலையில் வினாடிக்கு 377 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதேபோல செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 365 கனஅடியில் இருந்து 415 கன அடியாக அதிகரித்துள்ளது. ஏரியின் நீர்மட்டம் 16 புள்ளி 47 கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் 134 கனஅடியாகவும் உள்ளது.

Advertisement
Tags :
heavy rainlow pressureMAINmetrological centerrain alertrain warningtamilnadu damstamilnadu rainweather update
Advertisement
Next Article