தொடர் மழை - வேதாரண்யம் சுற்றுவட்டாரத்தில் உப்பு உற்பத்தி பாதிப்பு!
11:58 AM Nov 29, 2024 IST
|
Murugesan M
நாகை மாவட்டம் வேதாரண்யம் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை காரணமாக உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாராம் பாதிக்கப்பட்டுள்ளது.
Advertisement
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல், கோடிக்கரை ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக பெய்த கனமழையால் உப்பளங்களில் தண்ணீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 5000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
Advertisement
மீண்டும் உப்பு உற்பத்தியை தொடங்க ஒரு மாதகாலம் ஆகும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், உப்பு விலை உயர வாய்ப்பு உள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisement
Next Article