தொழிற்சாலை அமைக்கும் விவகாரம் - நிலம் கையகப்படுத்த பொது மக்கள் எதிா்ப்பு!
கடலூர் அருகே தொழிற்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அருகே தொழிற்சாலை அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இற்காக, அப்பகுதியில் உள்ள 150 நபர்களின் வீடுகளை 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி அரசு நோட்டீஸ் வழங்கியுள்ளது.
இதற்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், கடந்த பல வருடங்களாக வசித்து வரும் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், இன்று குடியிருப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அதை பொருப்படுத்தாமல் போராட்டகாரர்களை போலீசார் கைது செய்தனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.