த.வெ.க.மாவட்ட செயலாளருக்கு வரவேற்பு - போக்குவரத்து பாதிப்பு!
11:52 AM Jan 31, 2025 IST
|
Murugesan M
நாகையில் த.வெ.க. மாவட்டச் செயலாளரை வரவேற்க அக்கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டதால் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Advertisement
நாகப்பட்டினம் மாவட்ட த.வெ.க. மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்ட சுகுமாரனை வரவேற்க, மாவட்ட எல்லையான வாஞ்சூரில் 100க்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரண்டனர். அவர்கள் நாகை-காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையை மறித்து நின்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
Advertisement
Advertisement