நகராட்சி நிர்வாகத் துறையில் ஊழல் கண்டுபிடிப்பு - அமலாக்கத்துறை
நகராட்சி நிர்வாகத் துறையில் ஊழல் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
Advertisement
நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது மகன் அருண் நேரு ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை கடந்த 7ஆம் தேதி சோதனை நடத்தியது.
இந்த சோதனை தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அமலாக்கத்துறை, பணத்தை மோசடியாக பயன்படுத்தியதற்கான பல்வேறு குற்ற ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் சொத்து ஆவணங்கள் சோதனையின்போது கைப்பற்றப்பட்டதாக தெரிவித்துள்ளது.
குறிப்பாக அமைச்சர் நேருவின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் மற்றும் மகன் அருண் நேரு உள்ளிட்ட முக்கிய நபர்கள் நிதியை மாற்றி மோசடியில் ஈடுபட்டதற்கு சான்றுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நகராட்சி நிர்வாகத்துறையில் டெண்டர்கள் கொடுக்க லஞ்சம் பெறப்பட்டதும் சோதனையின் மூலம் அம்பலமாகி உள்ளதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. .