செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நகர்மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஒப்பந்ததாரர்!

07:29 PM Mar 21, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சியில் ஒப்பந்தப் பணிகளுக்கு கமிஷன் கேட்ட நகர் மன்ற தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

நெல்லியாளம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையிலான பணிகளைக் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் மேற்கொண்டு வந்தார்.

அவரிடம் நகர்மன்ற தலைவர் சிவகாமி மற்றும் திமுக கவுன்சிலர்கள் 17 சதவீதம் கமிஷன் கேட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் ஒப்பந்தம் ரத்தானதால் ஒப்பந்ததாரர், நகர்மன்ற தலைவரைச் சாதி ரீதியாகத் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில் ஒப்பந்ததாரர்கள் நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

அதேபோல் கமிஷன்  கேட்டதாக ஒப்பந்ததாரர் அளித்த புகாரின் பேரில் நகர்மன்ற தலைவர் சிவகாமி மற்றும் அவரது உதவியாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
Tags :
Contractor threatens to kill city council chairman!கொலை மிரட்டல்
Advertisement