செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நகை வியாபாரியிடம் வழிப்பறி செய்த 7 பேர் கைது!

10:50 AM Mar 17, 2025 IST | Murugesan M

ராமநாதபுரம் அருகே நகை வியாபாரியிடம் இருந்து ரத்தினக்கல்லை வழிப்பறி செய்த சம்பவத்தில் 7 பேரை காவல்துறை  செய்தனர்.

Advertisement

மதுரையைச் சேர்ந்த முனியசாமி என்பவர் நகைகளில் சாதி கற்கள் பதிக்கும் வியாபாரம் செய்து வரும் நிலையில், தன்னிடம் உள்ள 7 கிராம் அலெக்சாண்டர் ரத்தினக் கல்லை ரசீதுடன் விற்பனை செய்வதற்காகக் கடந்த ஜனவரி மாதம் 21ஆம் தேதி ராமநாதபுரம் சென்றுள்ளார்.

ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் முனியசாமி வைத்திருந்த 60 லட்சம் ரூபாய் மதிப்பாலான ரத்தினக்கல், 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் உள்ளிட்டவற்றை 7 பேர் கொண்ட மர்ம கும்பல் பறித்துச் சென்றுள்ளது.

Advertisement

இது தொடர்பாக முனியசாமி அளித்த புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து, 7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். இந்நிலையில், வழக்கில் தொடர்புடைய 7 பேரை காவல்துறை கைது செய்தனர்.

மேலும், அவர்களிடம் இருந்த ரத்தினக்கல், 15 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், வழிப்பறி வழக்கில் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர் மாவட்ட எஸ்பி வெகுவாக பாராட்டினார்.

Advertisement
Tags :
MAINramanathapuramTn newsராமநாதபுரம்
Advertisement
Next Article