நடந்தாய் வாழி காவிரி திட்டத்தின் நிலை என்ன? - ஈஸ்வரன் கேள்வி!
05:07 PM Apr 01, 2025 IST
|
Murugesan M
நடந்தாய் வாழி காவிரி திட்டத்தின் நிலை என்ன ஆனது எனக் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Advertisement
மத்திய மற்றும் மாநில அரசின் நிதியுதவியுடன் நடைபெறும் 'நடந்தாய் வாழி' காவிரி திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளதாகவும், இத்திட்டத்தின் நிலை என்ன எனவும் சட்டப்பேரவையில் ஈஸ்வரன் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதில் அளித்துப் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.
Advertisement
Advertisement