செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்!

01:22 PM Oct 18, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

ஐந்து கோடி ரூபாய் கேட்டு பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால், மும்பையில் அவரது வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மான் வேட்டைப் புகாரில் பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொல்லவிருப்பதாக கேங்க்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் அறிவித்த நிலையில் இந்த முயற்சியானது 2 முறை முறியடிக்கப்பட்டது.

சல்மான் கானின் மிக நெருங்கிய நண்பரான பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்ட நிலையில், சல்மானுக்கு உதவுபவர்களை விடமாட்டோம் என லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ஷுபு லோங்கர் என்பவர் முகநூலில் எச்சரிக்கை விடுத்தார்.

Advertisement

அவரை போலீசார் தேடி வரும் நிலையில், சல்மான் கானின் உயிருக்கு விலை நிர்ணயித்து போக்குவரத்து காவலரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேங்க்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் உடனான மோதலை தீர்க்க சல்மான் கானிடம் இருந்து 5 கோடி ரூபாய் பெற்றுத்தர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பணம் தராவிட்டால், பாபா சித்திக்கிற்கு ஏற்பட்ட நிலையே வரும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மும்பை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மும்பை பாந்த்ராவில் உள்ள சல்மான் கானின் குடியிருப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

Advertisement
Tags :
Death threat to actor Salman Khan!MAIN
Advertisement