நடிகர் டெல்லி கணேஷ் மறைவு - மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல்!
நடிகர் டெல்லி கணேஷ் மறைவுக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Advertisement
எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள இரங்கல் குறிப்பில், தமிழ்த் திரைப்படத் துறையின் புகழ்பெற்ற குணச்சித்திர நடிகரான டெல்லி கணேஷ் , உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த மனவருத்தமளிக்கிறது.
தனது சிறந்த நடிப்பிற்காக, ‘கலைமாமணி விருது’ மற்றும் சிறந்த நடிகருக்கான விருது விருதுகளை வென்றவர், 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
தமிழ்ச் சினிமாவில் நடிக்கத் துவங்கும் முன்பு, இந்திய விமானப் படையிலும் பணியாற்றி நாட்டிற்கு சேவையாற்றியுள்ளார்.
இந்தச் சமயத்தில், அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலும், இரங்கலும் தெரிவித்துக் கொள்வதோடு, அண்ணாரது ஆன்மா சாந்தியடைய கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.