நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா நீதிமன்றத்தில் ஆஜர் - விவாகரத்து வழக்கில் வரும் 27ஆம் தேதி தீர்ப்பு!
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் வரும் 27-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Advertisement
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த 2004 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு லிங்கா மற்றும் யாத்ரா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், இருவரும் திருமண பந்தத்தில் இருந்து விலகுவதாக 2022-ம் ஆண்டில் அறிவித்தனர்.
இது தொடர்பாக, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி இருவரும் மனு தாக்கல் செய்தனர். கடந்த மூன்று முறை விசாரணைக்காக ஆஜராகாத நிலையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் இன்று நேரில் ஆஜராகினர்.
அப்போது, திருமண பந்தத்தில் இருந்து பிரிவதில் உறுதியாக இருப்பதாக இருவரும் தெரிவித்தனர். இதனையடுத்து, வரும் 27-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது..