நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கு - நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
06:00 PM Dec 12, 2024 IST
|
Murugesan M
நடிகர் தனுஷ் தொடர்ந்த வழக்கில் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தினர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
நடிகர் தனுஷின் `வொண்டர்பார்' நிறுவனம் தயாரித்த 'நானும் ரவுடிதான்' திரைப்படத்தின் காட்சிகளை, நடிகை நயன்தாரா தனது திருமண ஆவண படத்தில் அனுமதி பெறாமல் பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.
அதற்காக 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டும், அனுமதியின்றி பயன்படுத்தப்பட்ட காட்சிகளை ஆவணப்படத்தில் இருந்து நீக்க வலியுறுத்தியும் `வொண்டர்பார்' நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
Advertisement
இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கு தொடர்பாக நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவத்தினர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 8-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
Advertisement