நடிகர் மனோஜ் உடலுக்கு திரைபிரபலங்கள் அஞ்சலி!
மாரடைப்பால் உயிரிழந்த மனோஜ் உடலுக்கு நடிகர்கள் விஜய், சூர்யா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
Advertisement
இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் தனது குடும்பத்துடன் சென்னை சேத்துப்பட்டில் வசித்து வந்தார். அண்மையில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதனையடுத்து அவர் வீட்டில் ஓய்வில் இருந்த நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
நடிகர் மனோஜின் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமைலை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், கமல்ஹாசன், இளையராஜா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
நீலாங்கரையில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக மனோஜ் உடல் வைக்கப்பட்டு உள்ளது. அப்போது நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
இதேபோல், நடிகர் சூர்யாவும் நீலாங்கரையில் உள்ள வீட்டிற்கு சென்று மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
நடிகர் மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் பேட்டியளித்த பாடலாசிரியர் வைரமுத்து, கலைஞர்கள் தங்களது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும், கலைஞர்கள் வாழ்க்கை முறையை வகுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.