செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நடிகர் மனோஜ் குமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

01:36 PM Apr 04, 2025 IST | Murugesan M

பழம்பெரும் இந்தி நடிகரான மனோஜ் குமார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement

தேசப்பற்று மிக்க திரைப்படங்களில் நடித்துப் பெயர் பெற்ற பழம்பெரும் இந்தி நடிகர் மனோஜ் குமார் வயது மூப்பு காரணமாகக் காலமானார்.

அவருக்கு வயது 87. கடந்த சில நாட்களாக இருதய பிரச்சனையால் சிரமப்பட்ட அவர், பிப்ரவரி 21ஆம் தேதி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisement

அங்கு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி அதிகாலை 3.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் 1937ம் ஆண்டு பிறந்த இவரது இயற்பெயர் ஹரிகிருஷன் கோஸ்வாமியாகும். தேசபக்தி, ஒருமைப்பாடு ஆகியவற்றை மையமாகக் கொண்ட கதைகளில் நடித்ததன் மூலம்  மக்கள் மனதில் தனியிடம் பிடித்தார்.

தேசிய விருது, ஏழு ஃபிலிம்பேர் விருதுகளைப் பெற்ற இவருக்கு 1992ஆம் ஆண்டு பத்மஶ்ரீ விருது, 2015ல் தாதாசாகேப் பால்கே விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது. இந்நிலையில், அவரது இறுதிச்சடங்குகள் நாளை நடைபெறும் என அவரது மகனும், நடிகருமான குணால் கோஸ்வாமி தெரிவித்துள்ளார்.

புகழ்பெற்ற நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமான மனோஜ் குமாரின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்ததாகப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய சினிமாவின் ஒரு சின்னமாகத் திகழ்ந்தவர் மனோஜ் குமார் எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.

நடிகர் மனோஜ் குமாரின் தேசபக்தி அவர் நடித்த திரைப்படங்களில் வெளிப்பட்டது எனத் தெரிவித்துள்ள அவர், மனோஜ் குமாரின் படைப்புகள் இளைய தலைமுறைகளுக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கும் எனக் கூறியுள்ளார்.

நடிகர் மனோஜ் குமாரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், திரைத்துறையினரும் எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Tags :
FEATUREDMAINPM Modi condoles the demise of actor Manoj Kumar!பிரதமர் மோடி இரங்கல்
Advertisement
Next Article