நடிகர் மனோஜ் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம்!
06:52 AM Mar 27, 2025 IST
|
Ramamoorthy S
மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
Advertisement
இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவரது உடல் சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதையடுத்து அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் மனோஜின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து நடிகர் மனோஜின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது இரு மகள்களும் இறுதிச் சடங்கு செய்தனர். அப்போது பிரிவு தாளாமல் உறவினர்கள் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். தொடர்ந்து மனோஜின் உடல் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement