செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் - அண்ணாமலை வாழ்த்து!

09:46 AM Dec 12, 2024 IST | Murugesan M

இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் ரஜினிகாந்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், எளிய பின்னணியில் இருந்து வந்து, தனது கடும் உழைப்பாலும், மேன்மையான பண்புகளாலும், இந்தியத் திரையுலகின் அடையாளங்களில் ஒருவராக உயர்ந்திருக்கும், அன்புக்கும் மரியாதைக்கும் உரிய, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, மூன்று தலைமுறைகளை, தனது வசீகரத்தால் கட்டிப் போட்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  மேலும் பல்லாண்டுகள் நலமுடன் ஆரோக்கியத்துடன் வாழ, இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Advertisement

இதேபோல், அவர் விடுத்துள்ள மற்றொரு பதிவில், நடிகர் ஜெயராம் மகன் திருமண வரவேற்பில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், தென்னிந்திய மொழிகளில் சிறந்த நடிகர்களில் ஒருவரும், மிகச் சிறந்த பண்பாளருமான, சகோதரர் திரு. ஜெயராம் அவர்களது மகனும், வளர்ந்து வரும் நடிகருமான, செல்வன். காளிதாஸ் ஜெயராம் மற்றும் மணமகள் செல்வி. தாரிணி காளிங்கராயர் ஆகியோரின் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மணமக்கள் இருவரும், இன்று போல என்றும் அன்புடனும், மகிழ்வுடனும், பல்லாண்டு காலம் நலமுடன் வாழ வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement
Tags :
annamalai greetingsFEATUREDMAINrajinikanth birthday
Advertisement
Next Article