நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் - தங்க தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்திய சிவகங்கை ரசிகர்கள்!
10:05 AM Dec 12, 2024 IST
|
Murugesan M
நடிகர் ரஜினிகாந்தின் 74-வது பிறந்த நாளையொட்டி சிவகங்கையில் உள்ள மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் ரசிகர்கள் தங்க தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
Advertisement
நடிகர் ரஜினிகாந்தின் 74-வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் திருப்புவனம் பகுதியில் உள்ள அவரது ரசிகர்கள், ரஜினிகாந்த் பெயரில் சிறப்பு வழிபாடு செய்ய முடிவு செய்தனர்.
அந்த வகையில், திருப்புவனத்தில் உள்ள பத்திரகாளியம்மன் கோயிலில் அவரது பெயருக்கு தங்க தேர் இழுத்து, சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினர்.
Advertisement
இதில் மாவட்ட செயலாளர் ராமேஸ்வரன் உள்ளிட்ட ரசிகர்கள் பலர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
Advertisement
Next Article