செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நடுத்தர வர்க்கத்தினரின் சொந்த வீட்டு கனவை நிறைவேற்ற அரசு உறுதிபூண்டுள்ளது - குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உறுதி!

11:23 AM Jan 31, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

நடுத்தர வர்க்கத்தினரின் சொந்த வீடு என்ற கனவை நிறைவேற்ற அரசு உறுதிபூண்டுள்ளதாக குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.

Advertisement

2025-26ஆம் ஆண்டுக்கான  நிதிநிலை அறிக்கை நாளை  தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தாவது :

"பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஐந்து கோடி மக்களுக்காக  'தார்த்தி ஆபா ஜன்ஜாதிய கிராம் உத்கர்ஷ் அபியான்' திட்டத்தை அரசு தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.  இளைஞர்களின் கல்வி மற்றும்  புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் சிறப்பு கவனம் அரசாங்கம் செலுத்தியுள்ளது.

Advertisement

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆறு கோடி மூத்த குடிமக்களுக்கு சுகாதார காப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்  அவர் கூறினார்.

"வரலாற்று சிறப்புமிக்க மகா கும்பமேளா நடந்து வருகிறது.  நமது கலாச்சார மரபுகளை பறைசாற்றும் இந்த விழாவில்,  ம இந்தியா மற்றும் உலகத்தைச் சேர்ந்த கோடிக்கணக்கான பக்தர்கள்  புனித நீராடியுள்ளதாக தெரிவித்தார். மௌனி அமாவாசை அன்று நடந்த விபத்துக்கு  இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும்,  காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் முர்மு தெரிவித்தார்.

"நடுத்தர வர்க்கத்தினரின் சொந்த வீடு என்ற கனவை நிறைவேற்ற எனது அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றும் முர்மு கூறினார். நாட்டில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சியில்  அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது என்றும்,  3 கோடி 'லக்பதி தீதி'களை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும்  அவர் கூறினார்.

இன்று அதிக எண்ணிக்கையிலான பெண்கள் போர் விமானங்களை இயக்குவது  காவல்துறையில் சேருவது மற்றும் நாட்டில் உள்ள நிறுவனங்களை வழிநடத்துவது மிகவும் பெருமை சேர்க்கும் விஷயம் என்றும் அவர் தெரிவித்தார். நமது மகள்கள் ஒலிம்பிக் பதக்கங்களை வென்று நாட்டை பெருமைப்படுவதாகவும் அவர் கூறினார்.

நமது இளைஞர்கள் தொழில், விளையாட்டு , விண்வெளி வரை அனைத்து துறைகளிலும் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாகவும்,  செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதில் இந்தியா உலகிற்கு வழி காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவை உலகளாவிய கண்டுபிடிப்பு சக்தியாக மாற்றுவதே எங்கள் நோக்கம் என்றும்,  செயற்கை நுண்ணறிவுத் துறையில், இந்திய AI மிஷன் தொடங்கப்பட்டுள்ளதாகவும் முர்மு கூறினார்.

 

Advertisement
Tags :
FEATUREDMAIN
Advertisement