நண்பரை ஜாமினில் எடுக்க சென்ற பார் பொறுப்பாளர் மீது தாக்குதல்!
05:31 PM Mar 17, 2025 IST
|
Murugesan M
திருப்பூரில் நண்பரை ஜாமினில் எடுக்க சென்ற பார் பொறுப்பாளரை காவல் ஆய்வாளர் சரமாரியாக தாக்கியதில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
Advertisement
கே.வி.ஆர் நகர் பகுதியில்உள்ள பாரில் தனசேகர் என்பவர் சப்ளையராக பணியாற்றி வந்தார். மதுபானம் விற்றது தொடர்பாக தனசேகரை கைது செய்த போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
இதையடுத்து அவரை ஜாமினில் விடுவிப்பதற்காக பார் பொறுப்பாளர் பாண்டி காவல்நிலையம் சென்றுள்ளார். அப்போது காவல் ஆய்வாளர் உதயகுமார், பாண்டியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
Advertisement
Advertisement