செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நதிநீர் கால்வாயை சீரமைக்க தமிழக அரசு உதவிட வேண்டும் : ஆந்திர மாநில பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கோரிக்கை!

02:14 PM Mar 29, 2025 IST | Murugesan M

கிருஷ்ணா நதிநீர் கால்வாயை உரிய முறையில் சீரமைக்கத் தமிழக அரசு உதவிட வேண்டுமென ஆந்திர மாநில பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரத்னா ரெட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement

சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த 24 ஆம் தேதி கிருஷ்ணா நதிநீர் திறந்து விடப்பட்டது.

சுமார் 152 கிலோமீட்டர் கால்வாய் வழியாக தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரை குப்பம் ஜீரோ பாய்ண்ட்டுக்கு நீர் வந்தடைந்தது. அப்போது நீரினை தமிழக, ஆந்திரா நீர்வளத்துறை அதிகாரிகள் மலர் தூவி வரவேற்றனர்.

Advertisement

அப்போது பேசிய ஆந்திர மாநில பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ரத்னா ரெட்டி, கண்டலேறு அணையில் 49 டிஎம்சி கொள்ளளவு நீர் இருப்பு  உள்ளதால் மக்கள் கவலை அடைய வேண்டாம் எனத் தெரிவித்தார்.

Advertisement
Tags :
MAINTamil Nadu government should help in repairing the river canal: Andhra Pradesh Public Works Department Executive Engineer's request!தமிழக அரசு
Advertisement
Next Article