நமது ஒற்றுமையே நாட்டின் பலம் : ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்!
நமது ஒற்றுமையே நாட்டின் பலம் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் பங்கேற்ற அவர், உலகுக்கு அமைதியை போதித்த இந்துக்களின் வாழ்வியல் முறைதான் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு அளிப்பதாக குறிப்பிட்டார்.
ஒட்டுமொத்த இந்துக்களையும் ஒன்றிணைத்து, தர்மத்தைக் காப்பதன் மூலம் உலகின் பிரச்னைகளுக்கு ஆர்எஸ்எஸ் ஆக்கபூர்வமான தீர்வுகளை அளிப்பதாக கூறிய மோகன் பகவத், எந்தச் சூழலிலும் இலக்கை அடைவதற்கான உறுதியைக் கைவிடக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து நாட்டில் நடைபெறும் போராட்டங்களை மேற்கோள்காட்டிய அவர், அனைத்துப் பிரச்னைகளுக்கும் பாரதத்தில் தீர்வு கிடைப்பதாகவும், மனம், புத்தி, உடலை ஒருங்கிணைப்பதன் மூலம் மோட்சத்தை அடைய முடியும் என்றும் கூறினார்.
பின்னர் நாட்டின் பெருமைகளை விளக்கிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், காசி கங்கை நீர் ராமேஸ்வரத்தில் தீர்த்தமாக அளிக்கப்படுவதாகவும், கேரளாவில் அவதரித்த ஆதிசங்கரர், நாட்டின் நான்கு மூலையிலும் ஆலயம் எழுப்பி ஒற்றுமையை பரப்பியதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.