செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நள்ளிரவில் பாஜக நிர்வாகி வீட்டின் கதவைத் தட்டிய மர்ம நபர்கள்!

04:58 PM Mar 22, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

ஓசூரில் பாஜக முன்னாள் மாவட்ட தலைவரின் வீட்டிற்குள் நள்ளிரவில் புகுந்து கதவைத் தட்டிய நபர்கள் யார்? எனக் கண்டுபிடிக்குமாறு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேர் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பாஜக முன்னாள் தலைவரான இவர், பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், நாகராஜ் வீட்டின்
கேட்டை திறந்து உள்ளே நுழைந்ததாகத் தெரிகிறது.

Advertisement

இருவரும் கீழ்த்தளத்தில் இருந்த வீட்டின் கதவை வேகமாகத் தட்டிய நிலையில், அச்சம் காரணமாக நாகராஜின் குடும்பத்தினர் கதவைத் திறக்கவில்லை.

பின்னர் இருவரும் முதல் தளத்திற்குச் சென்று நாகராஜ் உறங்கிக் கொண்டிருந்த அறையின் கதவைத் தட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால் அச்சமடைந்த நாகராஜ், சிசிடிவி கேமரா காட்சியுடன் ஓசூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது பேட்டியளித்த அவர், சமீபகாலமாகத் தன்னை மர்ம நபர்கள் சிலர் கண்காணிப்பதாகவும் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

Advertisement
Tags :
MAINMysterious people knocked on the door of a BJP executive's house in the middle of the night!பாஜக நிர்வாகி
Advertisement