செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

வரும் 16ஆம் தேதி நைஜீரியாவுக்கு செல்கிறார் பிரதமர் மோடி!

09:49 AM Nov 13, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

அரசு முறை பயணமாக பிரதமர் மோடி, நவம்பர் 16 ஆம் தேதி நைஜீரியாவுக்குச் செல்ல உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதுதொடர்பாக பிரதமர் பயணம் குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டு நாள் அரசு முறை பயணமாக வரும் 16ஆம் தேதி ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவுக்கு பிரதமர் மோடி செல்ல உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அங்கு இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் நைஜீரிய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதுடன், புலம்பெயர்ந்த இந்தியர்களின் கூட்டத்திலும் பிரதமர் உரையாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

அதை தொடர்ந்து பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் ஜி20 மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார் என்றும் வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

Advertisement
Tags :
20 conferenceBrazilFEATUREDMAINMinistry of External AffairsNigeriaprime minister modiRio de Janeiro
Advertisement