நவீன அறிவியல் பாரம்பரிய நுண்ணறிவுகளின் மதிப்பை அங்கீகரிக்கிறது - ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு
நவீன அறிவியல் நமது பாரம்பரிய நுண்ணறிவுகளின் மதிப்பை அதிக அளவில் அங்கீகரிப்பதாக, ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி ஒரு சிறந்த ஆராய்ச்சியாளர் மற்றும் கல்வியாளர் என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அவர், பசுவின் கோமியத்தில் உள்ள நன்மைகள் குறித்து அறிவியல் கட்டுரைகளை மேற்கோள் காட்டி அவர் தனது கருத்தை கூறியுள்ளதாக தெரிவித்துள்ள ஸ்ரீதர் வேம்பு நவீன அறிவியல் நமது பாரம்பரிய நுண்ணறிவுகளின் மதிப்பை அதிக அளவில் அங்கீகரிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து சமூக வலை தளங்களில் சிலர் வேண்டுமென்றெ பொய்யான கருத்தை பரப்பி வருவதாக தெரிவித்துள்ள ஸ்ரீதர் வேம்பு, இதுபோன்ற தாக்குதல் கும்பல்களுக்கு இடமளிக்காமல் ஐஐடி இயக்குநர் காமகோடி உறுதியாக இருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.