செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நவீன சகாப்தத்தின் முன்மாதிரி சத்ரபதி சிவாஜி - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத் புகழாரம்!

09:58 AM Apr 03, 2025 IST | Ramamoorthy S

நவீன சகாப்தத்தின் முன்மாதிரியாக சத்ரபதி சிவாஜி மகாராஜ் திகழ்கிறார் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் புகழாரம் சூட்டியுள்ளார்.

Advertisement

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி குறித்து எழுதப்பட்ட புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. எழுத்தாளர் சுமந்த் தேகடே எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆர்எஸ்எஸ் தலைவர்களான கேசவ் ஹெட்கேவர், மாதவ்ராவ் கோல்வால்கர், பாலசாகேப் தியோரஸ் ஆகியோர் புராண சகாப்தத்தின் 'ஹனுமான்' என தெரிவித்தார்.

Advertisement

சிவாஜி மகாராஜ் நவீன சகாப்தத்தின் முன்மாதிரி எனக்கூறிய அவர், முகலாய ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தியதால் சிவாஜி மகாராஜ் 'யுகபுருஷர்' என குறிப்பிட்டார். மேலும், சத்ரபதி சிவாஜியின் செயல்கள் தனிநபரும் ஒரு தேசமும்  பின்பற்றத்தக்கவை என மோகன் பகவத் தெரிவித்தார்.

Advertisement
Tags :
chhatrapati shivaji maharajChhatrapati Shivaji Maharaj is a role modelFEATUREDMAINNagpurRSS chief Mohan BhagwatYugandhar Shivray’ book release
Advertisement
Next Article