நாகை அருகே விளை நிலங்களுக்குள் புகுந்த கடல் நீர் - சுமார் 100 ஏக்கர் சம்பா பயிர் பாதிப்பு!
03:28 PM Nov 20, 2024 IST
|
Murugesan M
நாகை அருகே விளைநிலங்களுக்குள் கடல்நீர் புகுந்ததால் 100 ஏக்கர் அளவிலான சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
Advertisement
நாகை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக கடல் பகுதிகளில் சீற்றம் ஏற்பட்டு பிரதாப ராமபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்குள் கடல்நீர் புகுந்தது.
இதன் காரணமாக 100 ஏக்கர் அளவிலான வயலில் கடல்நீர் புகுந்ததால் அங்கு பயிரிடப்பட்டிருந்த சம்பா நெற்பயிர்கள் அழுகி வருகின்றன.
Advertisement
இதனால் ஏக்கர் ஒன்றுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்ததாக தெரிவித்த விவசாயிகள் கடற்கரை ஓரங்களில் தடுப்பணை கட்டி தர வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
Advertisement
Next Article