நாகை , மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்!
03:35 PM Nov 10, 2024 IST
|
Murugesan M
நாகை , மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு வங்கக்கடலில் அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை கனமழைக்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. .
Advertisement
வரும் 12-ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், திரூவாரூர், நாகை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Advertisement