செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் - நாளை அனைத்துக்கட்சி கூட்டம்!

12:10 PM Nov 23, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு நாளை அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது.

Advertisement

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை மறுதினம் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடர் டிசம்பர் 20-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்னிட்டு நாளை காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

அப்போது கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து மத்திய அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட உள்ளது. வக்பு சட்ட திருத்தம் உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வரும் நிலையில், பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement

மேலும், வரும் 26-ம் தேதி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அரசியல் சாசனத்தின் 75-ம் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படும் என மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
All party meetingMAINWaqf Act Amendmentwinter session of Parliament.
Advertisement