For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

நாட்டின் பாதுகாப்பு, சமூக சேவையில் முன்னிலை வகிக்கும் சீக்கியர்கள் - ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்!

11:48 AM Nov 15, 2024 IST | Murugesan M
நாட்டின் பாதுகாப்பு  சமூக சேவையில் முன்னிலை வகிக்கும் சீக்கியர்கள்   ஆளுநர் ஆர் என் ரவி புகழாரம்

சிறுபான்மையினராக இருக்கும் சீக்கியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் மக்களுக்கு சேவையாற்றுவதில் முன்னிலை வகிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள ஸ்ரீ குருநானக் சத் சங்க சபாவில் நடைபெற்ற ஸ்ரீ குருநானக் தேவ்-ன் 555-வது பிறந்த நாள் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மகன் ராகுல் ரவியுடன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

Advertisement

சிறப்பு பிரார்த்தனை முடிந்த பின் மேடையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, சீக்கிய மத குருவான குருநானக் போதித்த கொள்கைகளை பின்பற்றியே சீக்கியர்கள் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், சிறுபான்மையினராக உள்ள சீக்கியர்கள் நாட்டின் பாதுகாப்பிலும், சமூக சேவையிலும் முன்னிலை வகிப்பதாக தெரிவித்த அவர், சீக்கியர்கள் மத வேற்றுமையின்றி அனைவரும் சமம் என கருதி வாழ்ந்து வருவதாக புகழாரம் சூட்டினார்.

Advertisement

தொடர்ந்து பேசிய அவர், குருமார்களின் போதனைகளை குழந்தைகளுக்கு போதிக்க வேண்டியது மிகவும் அவசியம் எனவும் அறிவுறுத்தினார்.

இதேபோல் ஆளுநர் ஆர்.என்.ரவி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், ஸ்ரீ குருநானக் தேவ்ஜியின் பர்காஷ் பர்வ் தினத்தில் அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள்.

பணிவு, தன்னலமற்ற சேவை மற்றும் சமத்துவம் பற்றிய அவரது போதனைகள், இரக்கம், நீதி மற்றும் சமத்துவ சமுதாயத்திற்கான பகிரப்பட்ட முயற்சியில் நமது பாதையை தொடர்ந்து ஒளியூட்டி வழிகாட்டுகின்றன.

மேலும் உள்ளடக்கிய, இணக்கமான மற்றும் நெகிழ்ச்சியான உலகத்தை நோக்கிய விஸ்வ பந்துவாக பாரதத்தின் முக்கிய பங்களிப்புக்கு அவரது கொள்கைகள் நித்திய சக்திகளாக செயல்படுகின்றன என தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
Advertisement