செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நாட்டுக்காகவும், மக்கள் நலனுக்காகவும் வாழ்ந்தவர் ராஜகோபால தொண்டைமான் : அண்ணாமலை புகழாரம்!

10:21 AM Jan 16, 2025 IST | Murugesan M

குடும்பத்துக்குச் சொந்தமான சமஸ்தானச் சொத்துக்களை, நாட்டின் வளர்ச்சிக்காக வழங்கியவர் மகாராஜா அமரர் ராஜகோபால தொண்டைமான் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மகாராஜா அமரர் ராஜகோபால தொண்டைமான் அவர்கள் நினைவு தினம் இன்று.

Advertisement

சர்தார் வல்லபாய் படேல் அவர்களது கோரிக்கையை ஏற்று, எந்த நிபந்தனையும் இல்லாமல், புதுக்கோட்டை சமஸ்தானத்தைச் சுதந்திர இந்தியாவுடன் இணைத்தவர்.

குடும்பத்துக்குச் சொந்தமான சமஸ்தானச் சொத்துக்களை, நாட்டின் வளர்ச்சிக்காக வழங்கியவர்.

புதுக்கோட்டை மாவட்டம் அமைக்கப்பட்டபோது, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைக்க, 100 ஏக்கர் நிலத்தைத் தானமாக வழங்கியவர். பல்வேறு மொழிகள் கற்றவர்.

நாட்டுக்காகவும், நாட்டு மக்கள் நலனுக்காகவும் வாழ்ந்த மகாராஜா, அமரர் ராஜகோபால தொண்டைமான் அவர்கள் நினைவுகளைப் போற்றி வணங்குகிறோம்  என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
bjp k annamalaiFEATUREDMAINPudukkottai
Advertisement
Next Article