நாட்டை விட்டு வெளியேறிய சிரியா அதிபர் - சிலைகளை இடித்து தள்ளிய கிளர்ச்சியாளர்கள்!
சிரியாவின் அதிபர் பஷார் அல் அசாத் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில், அவர் மற்றும் அவர் தந்தையில்டி சிலையை கிளர்ச்சியாளர்கள் இடித்து தள்ளினர்.
சிரியாவில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என ஐ.நா. அமைப்பு தெரிவிக்கின்றது. சில ஆண்டுகளாக பெரிய அளவில் வன்முறை எதுவும் ஏற்படாத நிலையில், கடந்த வாரம் மீண்டும் கிளர்ச்சி வெடித்தது.
அதிபர் பஷார் அல் அசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் டமாஸ்கசை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், அதிபர் பஷார் அல் அசாத் தப்பிச் சென்ற விமானம் மாயமாகி உள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், அவரின் சிலையை கிளர்ச்சியாளர்கள் இடித்து தள்ளிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.