செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

நாமக்கல் : இடுகாட்டில் ஒரே இடத்தில் 6 மண்டை ஓடுகள் வைத்து எரிக்கப்பட்ட சம்பவம்!

03:15 PM Mar 26, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே இடுகாட்டில் ஒரே இடத்தில் 6 மண்டை ஓடுகள் வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

கோவிந்தம் பாளையம் பகுதியில் உள்ள இடுகாட்டில் உயிரிழந்த மூதாட்டியின் உடலைப் புதைப்பதற்காக, அவரது உறவினர்கள் குழி வெட்டியுள்ளனர். அப்போது, 6 மனித மண்டை ஓடுகள், மாந்திரீகத்திற்குப் பயன்படும் ஆணி, அரிவாள் உள்ளிட்டவை அங்கிருந்தது தெரிய வந்தது.

மேலும் டப்பாக்களில் மர்மப் பொருட்களும், காவல்துறையினர் பயன்படுத்தக் கூடிய காலணிகளும் அங்கே கிடந்தன. புகாரின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்று போலீசார், உதவி கிராம அலுவலர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். மனித மண்டை ஓடுகளைக் கொண்டு மாந்திரீகம் செய்யப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement
Tags :
6 மண்டை ஓடுகள்MAINNamakkal: Incident where 6 skulls were burned in one place in the cemetery!
Advertisement